LOADING

Type to search

Cinema News Genral News Photos

பத்மாவத், நிமிர், பாகமதி படங்களிள் முதல் நாள் வசூலில் யார் கிங்.!

Rajesh Jan 27

பத்மாவத்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பத்மாவத் ’. ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாகித் கபூர் ஆகிய மூவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ராணி பத்மினி வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

                                         padmavati Deepika Padukone

இசை சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் பின்னணி ஸ்கோர் சஞ்சித் பல்ஹாரா, ஒளிபதிவாளர் சுன்தீப் சட்டர்ஜி, எடிட்டர் ஜெயந்த் ஜாதர்,சஞ்சய் லீலா பன்சாலி, அகிவ் அலி.

இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீராஜ்புத் கர்ன சேனை உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் தீபிகா படுகோனே தலையைக் கொண்டு வருபவர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. தீபிகா தலைக்கு 10 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்த படத்தின் முதல் நாள் வசூல் தெரியவந்துள்ளது இந்த படம் பாலிவுட் படமான பத்மாவத் ரூ. 52 லட்சம் வசூல் செய்துள்ளது.

 

பாகமதி

அனுஷ்கா ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ‘பாகமதி’ படத்தில் நடித்துள்ளார், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் த்ரில்லர் படமாக வெளியாகியுள்ளது.

 bhaagamathie movie review

இந்த படத்தில் அனுஷ்கா,உன்னி முகுந்தன் ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக அர்.மதி ஆகியோர் பணிபுரிந்து இருக்கிறார்கள். இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அசோக் இயக்கியுள்ளார். தெலுங்கில் யூவி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கிறது. தமிழில் ஸ்டூடியோ க்ரீன் வெளியிடுகிறது. இந்த படத்தின் எடிட்டர் கோட்டகிரி வெங்கடேஷ்வார ராவ்.

மேலும் இந்த படம் முதல் நாள் வசூல் பாகமதி- ரூ. 37 லட்சம் வரை சேர்த்துள்ளது.

நிமிர்

பிரபல தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் நிமிர் இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக
நடித்துள்ளார்.

nimir movie review

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் ரீமேக் தன் இந்த படம். படத்தில் மகேந்திரன்,உதயநிதி, நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் என பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

தர்புகா சிவா மற்றும் அஜநீஷ் லோக்னத் இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் , எடிட்டர் எம்.எஸ்.ஐயப்பன் நாயர். தமிழ் ரீமேக்கிற்கு வசனம் சமுத்திரக்கனி தான் வசனம் எழுதியுள்ளார்.

இந்த படத்தின் வசூல் விவரம் தெரியவந்துள்ளது இந்த படத்தின் முதல் நாள் வசூல் நிமிர்- ரூ. 24 லட்சம் வசூல் செய்துள்ளது.